(பாறுக் ஷிஹான்)

அம்பாறை மாவட்டத்தில் 34 ஆவது  தேசிய  மத்தியஸ்த தின நிகழ்வு சிறப்பான முறையில் இன்று(16)  நடைபெற்றது.

 அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.முதலில் பங்கேற்பாளர்களின் பதிவுகள் நடைபெற்றது.

பின்னர் மங்கள விளக்கேற்றல் சர்வமத மௌ பிரார்த்தனை வரவேற்பு நடனம் வரவேற்பு உரை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று  கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மத்தியஸ்த சபையில் கடமையாற்றியவர்கள் தெரிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்  மத்தியஸ்த சபைகளின் செயற்பாட்டை மேலும் வலுவடையச் செய்யும் நோக்கில் நீதி அமைச்சின் ஆலோசனைக்கு அமைய மத்தியஸ்த சபைகள்
ஆணைக்குழுவினால் ஒவ்வொரு மாட்டங்களிலும் இந்த நிகழ்வு இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர அம்பாறை மாவட்டத்துக்கான நிகழ்வில் மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள்  அதன் மூலம் மேற்கொள்ளப்பட் வெற்றிச் செயற்பாடுகள் தொடர்பிலும்  அது எதிர்நேக்கும் சவால்கள் தொடர்பிலும் கருத்துரைகளும்  அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றன.இந்த நிகழ்வில் நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர்களான சமன் நாரங்கமன மற்றும் எம்.ஐ.எம் ஆஸாத் உட்பட   விசேட காணி மத்தியஸ்த சபை மற்றும் ஏனைய மத்திய சபைகளின தவிசாளர்கள்,மத்தியஸ்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,எனப் பலரும் கலந்துகொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours