பாறுக் ஷிஹான்
சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் 121 வது ஜனன தினத்தினை முன்னிட்டு மார்க்கண்டு முதலாளியின் சமூக அறக்கட்டளை நிவாரணப்பணிகளை இன்று முன்னெடுத்தது.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதனை அடுத்து மார்க்கண்டு முதலாளியின் சமூக அறக்கட்டளை சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்த ஜீ அவர்களின் 121 வது ஜனன தினத்தினை முன்னிட்டு காரைதீவு 7ம் பிரிவில் 60 குடும்பங்களுக்கு 2000 /- பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் வைத்த வழங்கி வைத்தனர்.
--
Post A Comment:
0 comments so far,add yours