-அஸ்லம் எஸ்.மெளலானா-


மருதமுனை 65 மீட்டர் சுனாமி மீள்குடியேற்றக் கிராமத்தில் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் வடிகான் நிர்மாணப் பணிகளை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் இன்று கண்காணிப்பு விஜயம் செய்து பார்வையிட்டார்.

இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்ற வெள்ள அனர்த்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இங்கு கல்முனை மாநகர சபையினால் 05 முக்கிய இடங்களில் வடிகான்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் ஊடாக இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து  வடிகான்களும் இணைக்கப்பட்டு வடிகான் கட்டமைப்பு முழுமைப்படுத்தப்படவுள்ளது.

இவ்வேலைத் திட்டத்தை துரிதமாக நிறைவு செய்யுமாறு மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் கண்காணிப்பு விஜயத்தின் போது அறிவுறுத்தியுள்ளார்.

கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜெளசி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், தொழில் நுட்ப உத்தியோகத்தர் எம். சுகுமார் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

மழை காலங்களில் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்கும் மருதமுனை 65 மீட்டர் கிராமத்தின் நீண்ட காலப் பிரச்சினைக்கு கல்முனை மாநகர சபை

மிகவும் கரிசனையுடன் தீர்பைப் பெற்றுத் தந்திருப்பதையிட்டு இப்பகுதி மக்களும் நலன் விரும்பிகளும் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours