வெல்லாவெளி பிரதேசசெயலகப்பிரிவுக்குட்பட்ட ராணமடு 16 ஆம் கிராமத்தில் இருந்து பூச்சுக்கூடுக்கிராமத்திற்குச் செல்லும் வீதி உடைப்பெடுத்துள்ளமையினால் அதனூடன போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதனை உடணடியாக செப்பனிட்டுத்தருதாறு அப்பிரதேச மக்களும் பிரயாணிகளும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட பாரி வெள்ளத்தினால் மூங்கிலாறு பெருக்கெடுத்து வெள்ளக்காடாக மாறியதுடன் அவ்வீதியினூடாக வெள்ளம் மேவிச்சென்றமையினால் இப் பாரிய உடைப்பு ஏற்பட்டுள்ளதுடன் இதுவரைக்கும் யாரும் திருத்துவதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பிரயாணிகள் விசனம் தெரிவிக்கின்றனர் அதே வேளை அவ் வீதி உடைப்பெடுத்தமையினால் பால்காய்ச்சின வட்டை வயல் பிரதேசம் உட்பட பல நெற்பயிர்களும் சேதமாகியுள்ளது.
எனவே அப்பிரதேச மக்களது நலனைக்கருத்தில் கொண்டு உடனடியாக  செப்பனிடுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்;  


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours