(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை
நிவர்த்தி செய்யும் முகமாக ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில்
மாபெரும் இரத்ததான முகாம் 26.12.2024 வியாழக்கிழமை கல்முனை அஷ்ரப்
ஞாபகார்த்த வைத்தியசாலையில் அமைப்பின் செயலாளர் முஹம்மட் முனா தலைமையில்
இடம் பெற்றது.
இந்நிகழ்வில்
அதிதிகளாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கியின்
வைத்திய அதிகாரி டாக்டர் , வைத்திய அதிகாரி டாக்டர் சுபோதா ஆகியோரும்
கலந்து கொண்டனர்.
இங்கு செயலாளர் முஹம்மட் முனா உரையாற்றும்போது,
எமது
பிரதேச வைத்தியசாலைக்கு ஏற்பட்டிருக்கின்ற இரத்த குறைபாட்டை நிவர்த்தி
செய்வதற்காக இவ்வாறான இரத்தக்கொடை நிகழ்வுகள் இடம் பெற வேண்டும். அதிலும்
குறிப்பாக ஒரு உயிரை வாழ வைப்பது ஒரு சமூகத்தை வாழ வைப்பது போன்ற நன்மையை
பெறக்கூடிய ஒரு செயற்பாடாகும்.
எனவே,
இந்த விடயம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலே நாம் முயற்சித்து
இந்த குருதிக்கொடையை ஏற்படு செய்திருக்கிறோம். எமது அமைப்பின் ஊடாக
இச்சமூக சேவையை தொடர்ந்தும் செய்து வருகிறோம் என்றும் கூறினார்.
இரத்ததான முகாமில் சுமார் 70 க்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் கலந்துகொண்டு தங்களது இரத்தங்களை தானம் செய்திருந்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours