( வி.ரி.சகாதேவராஜா)



காரைதீவின் முதல் பெண் பட்டதாரி ஓய்வு நிலை ஆசிரியை 

திருமதி தனலெட்சுமி சிவபாதசுந்தரம்( வயது 90)  இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கல்லடியில் காலமானார்.

அவர் 1962 இந்தியா சென்று கலைப்பட்டப் படிப்பை பூர்த்தி செய்திருந்தார்.

பின்னர் அவர் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் கல்வி கற்பித்து இறுதியாக கல்லடிக்கு இடம் பெயர்ந்த போது அவர் அங்கு கல்லடி விவேகானந்த மகளிர் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றார்.

அவருக்கு உதயகுமாரன் கனடா வாணி எனும் இரு பிள்ளைகள் உள்ளனர்.

கனடா விபுலானந்த கலை மன்றத்தின் பொருளாளராக மற்றும் முக்கிய பொறுப்புகளில் இருந்து கலைஇலக்கியச் சேவைகளாற்றி வருகிறார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை  மாலை கல்லடி மயானத்தில் நடைபெறும்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours