எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பில் ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் - செயற்திறனான முதுமைப் பருவம் எனும் தொனிப்பொருளில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (05) இடம் பெற்றது.

முதியோர்களுக்கான  தேசிய செயலகத்தின் ஒருங்கிணைப்புடன்  மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து முதியோர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு இடம் பெற்றது.

அரச, அரச சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனியார் பிரிவுகளில் தொழில் புரியும் அலுவலர்கள் ஓய்வுக்கு தயாராகும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறைத்தல்  சமூகமயமாதல் மற்றும் முதுமைப் படுவத்தினை செயற்றிறனாக எதிர் கொள்ளுதல் போன்ற விடயங்களை இலக்காகக் கொண்ட செயலமர்வு இடம் பெற்றது.

மாவட்டத்தில் அரச அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றி ஐம்பது வயதிற்கு மேற்பட்ட  ஓப்பூதியத்தியத்திற்கு தயாராகும் தெரிவு செய்யப்பட்ட  அலுவலகங்களுக்கான ஓய்வூதிய காலத்தில் உடலியல் உளவியல் நலம், ETF, EPF பெற்றுக் கொள்வதற்கான சுய கோவை தயார்படுத்தல், திட்டமிடப்பட்ட முதுமைப்பருவம் தொடர்பான தெளிவூட்டல்கள் ஓய்வூ பெற்ற ஆசிரியர் எஸ்.சிறிதரன், தொழிற்துறை உத்தியோகத்தர் கே. கணேசமூர்த்தி, ஓய்வூ பெற்ற உதவி கல்வி பணிப்பாளர் எம்.புவிராஜ் ஆகியோரினால் வளவாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களான திருமதி துஷியந்தி, திருமதி தட்ஷாயினி,  மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், திருமதி கோனேஸ்வரன்,  அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours