பாறுக் ஷிஹான்
ஜனாதிபதி செயலகத்தின் விசேட நிதி ஒதுக்கிட்டின் மூலம் முன்னாள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நிர்மாணிக்கப்பட்ட கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையின் அன்னதான மண்டப திறப்பு விழா சனிக்கிழமை (28) கல்முனை பிரதேச செயலாளர் டி.எம்.எம் அன்சார் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா,அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.பி.எம் சாஹீர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்தன தேரர்,மணிக்கமடு ரஜமகா விகாராதிபதி சிலரத்தன தேரர்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எஸ்.விஜிகரன்,கே.எல் சபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours