கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக மருத்துவர் குணசிங்கம் சுகுணன் இன்று (4) புதன்கிழமை பதவியேற்றார்.
முன்னதாக
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அளப்பரிய சேவையாற்றிய இவர்
இடமாற்றம் பெற்று கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக கொரோனா
காலகட்டத்தில் சிறப்பாக சேவையாற்றினார்.
பின்னர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக
கடமையாற்றிய இவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக
பணியாற்றினார்.
தற்போது அங்கிருந்து இடமாற்றலாகி கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு இன்று புதன்கிழமை காலை பதவியேற்றார்.
பதவியேற்பு நிகழ்வில் முன்னர் பணிப்பாளராக கடமையாற்றிய மருத்துவர் ரங்க சந்ரசேன கலந்து கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours