எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு
மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30) திகதி
மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் வெளிநாட்டலுவல்கள் மற்றும்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது
ஏற்பாட்டில் இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கிழக்கு
மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர பங்கேற்புடன்
கூட்டம் இடம் பெற்றது.
இதன்
போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான,கந்தசாமி பிரபு,
எம்.எல்.எ எம் ஹீஸ்புல்ஹா, ஞானமுத்து ஸ்ரீநேசன், ராசமாணிக்கம் சானக்கியன்,
, எம்.எஸ்.நலிம், வைத்தியர் இளையதம்பி ஶ்ரீநாத் உள்ளிட்ட அரசியல்
பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
மேலும்
இம்மாவட்டத்தின் விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல்,
மீன்பிடி, சட்டவிரோத மணல் அகழ்வு, யானை வேலி அமைத்தல், குடிநீர் மற்றும்
மின்சாரம் வழங்கள், மாவட்டத்தில் சுற்றுலா அபிவிருத்தியை மேம்படுத்தல்,
பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மற்றும் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையின் இடப்பற்றாக்குறை உட்பட்ட அனைத்து திணைக்களங்கள் சார்
விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை
நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு
ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரினால் பணிக்கப்பட்டுள்ளது.
குறித்த
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர்
ஆர்.எம்.பி.எஸ் ரத்நாயக்க, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உள்ளுராட்சி
மன்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள், மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள்,
மற்றும் பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள்
உள்ளிட்ட திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் இதன்போது
கலந்துகொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours