( வி.ரி.சகாதேவராஜா)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேட்டுவட்டை கிராம மக்களுக்கு "தாராள உள்ளங்கள் அறக்கட்டளை" எனும் அமைப்பு உலருணவு நிவாரணங்களை தாராளமாக வழங்கி வைத்தது.

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வந்த கனமழையினால் பாதிக்கப்பட்ட பாண்டிருப்பு மேட்டுவட்டைக் கிராமத்தில் உள்ள 116 குடும்பங்களுக்கு இவ் உலர் உணவுப்பொதிகள் நேற்று  (30) வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வானது தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் தலைவர் ஜே. ஜெயப்பிரகாஷ் தலைமையில் பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக கல்முனை வடக்கு  பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் கலந்து கொண்டு மக்களுக்கான பொதிகளை வழங்கி வைத்தார். 

 அறக்கட்டளையின் செயலாளர் எஸ்.சிறிஹரன் பொருளாளர் கே. நவநீதன் , மற்றும் சமூக சேவை உத்தியோகஸ்தர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours