( வி.ரி.சகாதேவராஜா)

இலங்கை அரச கணக்காய்வு சேவை(Srilanka State Auditing Service) பரீட்சையில் காரைதீவைச் சேர்ந்த இருவர் சித்தி அடைந்துள்ளார்கள்.

காரைதீவைச் சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக உதவி நிதிப் பொறுப்பாளர் அரவிந்தன் ஆனந்தசாமி மற்றும் ஆட்பதிவு திணைக்கள அபிவிருத்தி உபயோகத்தர் ஜீவரெத்தினம்  உதயகுமார் ஆகியோர் இந்த பரீட்சையில் சித்தி அடைந்திருக்கின்றார்கள்..

 இவர்களின் கணக்காய்வாளர் பதவிக்கான நேர்முக தேர்வு ஜனவரி 7ஆம் தேதி இடம்பெறும்.

அதன் பின்னர் இவர்கள் அரச கணக்காய்வாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

குறித்த பரீட்சையில் இருந்து  மொத்தமாக 469 பேர் தெரிவு செய்யப்பட்டார்கள். இதில் முப்பது (30) பேர் தமிழ் மொழி மூலம் பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours