சிவபெருமானை ஆராதிப்பதற்காகவும், அவரிடமிருந்து ஆசிகள் பெறுவதற்காக இவ்விரதத்தை அனுஸ்டிக்கிறோம்.
கூடவே முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும்.
குமாராலய தீபம்நேற்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இன்று சனிக்கிழமை சர்வாலய தீபம் கொண்டாடப்படுகிறது. நேற்றும்இன்றும் வீடுகளிலும் தீபம் ஏற்றி கொண்டாடப்படுகிறது.
இதைப் பற்றி அகநானூறு போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் பிரபலமாக திருவண்ணாமலையில் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரமும், பௌர்ணமியும் இணைந்து வரும் நாளில் தீபம் ஏற்றுவது வழக்கமாகும்.
ஆனால் இம்முறை அது அடுத்துஅடுத்த நாட்களில் வருகிறது.
கிருத்திகை நட்சத்திரம் வெள்ளிக்கிழமையும் பௌர்ணமி சனிக்கிழமையும் வருகிறது.
எனவே கிருத்திகை நட்சத்திரம் வரும் வெள்ளிக்கிழமை இந்த திருநாளில் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி ஒளிரச் செய்வார்கள்.
இவ்வாண்டு இம்மாதம் 13ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வருகிறது. கிருத்திகை வருவதால்
இந்த நாளில் சரியாக மாலை 6 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்றுவது சிறப்பு.
சனிக்கிழமை பௌர்ணமி நாளாகும்.அன்றும் தீபம் ஏற்றி கொண்டாடப்படுகிறது.
வீட்டில் பயன்படுத்தும் காமாட்சி விளக்கை முதல் நாளே நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்வது நல்லதாகும்.
ஸ்ரீஅண்ணாமலையார் அருள்புரியும் திருவண்ணாமலையில் மாலை ஆறு மணிக்கு பிரம்மாண்டமான தீபம் ஏற்றப்படுகிறது.
இது
சிவபெருமானின் அருளை பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்வைக் காண பல
லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் வந்து கூடியிருப்பார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் இந்த தெய்வீக தீபத்தைக் காண்பதன் மூலம்
சிவபெருமானை தாங்கள் அருகிலேயே தரிசிப்பதாக உணர்ந்து அவர் அருளைப்
பெறுகிறார்கள்.
ஐதீகக்கதை!
ஒரு
சமயம் மகாவிஷ்ணு, பிரம்மா இருவரும் சிவபெருமானின் அடி, முடியைத்
தேடிச்சென்று அதைக் காண முடியாமல் தங்கள் தோல்வியை ஏற்றுக்கொள்கின்றனர்.
அப்போது மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் சிவபெருமான் ஒளிப்பிழம்பாய்
காட்சியளித்தார். தாங்கள் கண்ட காட்சியை உலக மக்களுக்கும் காட்டி அருள
வேண்டும் என்று இருவரும் கேட்டுக்கொள்ள, திருக்கார்த்திகை நாளன்று
சிவபெருமான் பக்தர்களுக்கு ஒளிப்பிழம்பாய் ஜோதி வடிவில் காட்சியளிப்பதாக
ஐதீகம்.
நடைமுறை!
வாசலின்
இருமுனைகளில் வைக்கப்படும் இரு விளக்குகள் மட்டும் புதிதாக இருக்க
வேண்டியது அவசியமாகும். மற்ற இடங்களில் பழைய விளக்கைப் பயன்படுத்தலாம்
தவறில்லை. ஆனால், விளக்குகளை முதல் நாளே சுத்தம் செய்து வைக்க வேண்டும்.
தீபத்திருநாள் அன்று விளக்குகளை கழுவுவது சரியான முறையல்ல. சிலர் வாசலில்
குத்துவிளக்கு ஏற்றுவார்கள். அவ்வாறு குத்துவிளக்கைப் பயன்படுத்தும்போது
அழகாக கோலமிட்டு அதன் நடுவில் வைப்பதே சிறந்ததாகும்.
விளக்கில்
நெய், நல்லெண்ணெய், பஞ்சதீப எண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை
பயன்படுத்தலாம். வீட்டில் மொத்தம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். முதலில்
வாசல் படியில் தீபமேற்றிய பிறகே வீட்டினுள் தீபத்தை எடுத்து வந்து வைக்க
வேண்டும். பூஜையறையில் தீபமேற்றி எடுத்துச் செல்லக்கூடாது. அந்த தீபம்
குறைந்தது 30 நிமிடங்களாவது எரிய வேண்டியது அவசியமாகும்.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
Post A Comment:
0 comments so far,add yours