( வி.ரி. சகாதேவராஜா)
மண்முனை
தென் எருவில்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வருடாந்த ஒளி விழா
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் தலைமை மற்றும்
வழிக்காட்டுதலின் கீழ் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று
வியாழக்கிழமை நடைபெற்றது.
அதிதிகளினால்
மங்கல விளக்கேற்றப்பட்டதை தொடர்ந்து குறுமண்வெளி மெதடிஸ்த திருச்சபையின்
சகோ.இராமையா ஜஸ்டின் பிரபாகரனின் ஆசிச்செய்தியுடன் நிகழ்வுகள் ஆரம்பித்து
வைக்கப்பட்டன.
அதனைத்
தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்களினால் கரோல் கீதம், நாடகம், நடனம் போன்ற
பல கலைநிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன் , நத்தார் தாத்தா வருகை
மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான பரிசில்களும்
வழங்கிவைக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours