( விரி. சகாதேவராஜா)
உலகின்
முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள்
பிறந்த காரைதீவு இல்லத்திற்க இந்தியாவில் இருந்து வருகை தந்த சன்னியாசிகள்
விஜயம் செய்தார்கள்.
பகவத்கீதை புகழ் கீதா அமிர்தானந்த ஜீயும் மற்றும் ஐந்து மாதாஜீக்களும் கடந்த வெள்ளிக்கிழமை காரைதீவுக்கு வருகை தந்திருந்தார்கள்.
இந்தியா
திருநெல்வேலி மதுரை சாரதா ஆச்சிரம சன்னியாசிகளான சண்முக பிரியாம்பா,
கதாதர பிரியாம்பா, நீலகண்ட பிரியாம்பா, சதாசிவ ப்ரியாம்பா, துர்கா
பிரியாம்பா ஆகிய ஐந்து மாதாஜி களும் அவருடன் வந்திருந்தார்கள். மேலும்
இந்தியா தமிழ்நாட்டுச் சேர்ந்த 20 கீதா அன்பர்களும் கலந்து
கொண்டிருந்தார்கள் .
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மணிமண்டப வளாகத்துக்கு விஜயம் செய்த அவர்கள் விசேட பூஜையில் கலந்து கொண்டனர்.
பின்னர் மணிமண்டபத்திலே ஒன்று கூடலும் பணி மன்ற ஆலோசகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கீதா அமிர்தானந்த ஜி மற்றும் நீலகண்ட பிரியாம்பா ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள் .
அவர்களுக்கு சுவாமி விபுலானந்தரின் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது .
பணி மன்ற செயலாளர் கு. ஜெயராஜி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours