எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒளிவிழா நிகழ்வுகள் இன்று (17) திகதி புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஶ்ரீகாந்த் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஐஸ்டினா முரளிதரன் கலற்கு கொண்டு சிறப்பித்த நிகழ்வில்
மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜனி முகுந்தன், பனிச்சையடி அனைத்துலக அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி வின்சேஸ்லஸ், திராய்மடு மெதடிஸ் தேவாலயத்தின் அருட்பணியாளர் சுதாகரன், திராய்மடு சிமர்னா தேவாலயத்தின் சிரேஸ்ட போதகர் எஸ்.வசந்தகுமார் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்துள்ளனர்.
நிகழ்வில் சிறார்களின் அழகிய நடன நிகழ்வுகள், அதிதிகளின் உரை, கரோல் கீதங்கள், இயேசு பாலகனின் பிறப்பை நினைவூட்டும் நிகழ்வுகளும், நத்தார் தாத்தாவின் நடனம் மற்றும் சிறார்களுக்கான பரிசு பொருட்கள் வழங்கலும் நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours