எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலக கட்டடத் தொகுதியில் சகல திணைக்களங்களின் பணிகளும் செயப்படத் தொடங்கியுள்ள நிலையில் அவற்றை இணைக்கும் தொழில்நுட்ப கட்டமைப்பை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் இன்று (17) பார்வையிட்டார்.

மாவட்ட செயலகத்தின் தொழில்நுட்ப பிரிவு உத்தியோகத்தர்களினால் தொழில்நுட்ப கட்டமைப்பு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அங்குள்ள தொழில்நுட்ப கட்டமைப்பின் செயற்பாடுகள் மற்றும் அவை எவ்வாறு ஒவ்வொரு திணைக்களத்துடனும்  தொழில்நுட்ப வசதிகளுக்காக இணைக்கப்பட்டுள்ளன போன்ற  விடயங்கள் தொடர்பாக அரசாங்க அதிபருக்குத் தெளிவு படுத்தப்பட்டன.

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் இயங்கி வந்த மாவட்ட செயலகம் மற்றும் அங்கிருந்த பல்வேறு அரச திணைக்களங்கள் திராய்மடு பிரதேசத்தில் உள்ள புதிய கட்டடத் தொகுதியில் கடந்த ஜூன் 22 ஆம் திகதியில் இருந்து கட்டம் கட்டமாக சகல திணைக்களங்களும் உத்தியோகபூர்வமாக   செயற்பட ஆரம்பித்துள்ளது.

அத்துடன் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் காணிப் பிரிவு மற்றும் அதனுடன் இணைந்த பிரிவுகள் தற்போதும் ஒல்லாந்தர் கோட்டையில் இயங்கி வருவதுடன் விரைவில் புதிய செயலகக் கட்டடத் தொகுதியில் தமது பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours