( வி.ரி. சகாதேவராஜா)
தேசிய பாடலாக்க போட்டியில் அம்பாறை மாவட்டத்தின் வீரமுனையைச் சேர்ந்த அருளானந்தம் சுதர்சன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உளவள ஆலோசனை உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் அருளானந்தம் சுதர்சன்
ஏலவே பல விருதுகளைப் பெற்றவர்.
நேற்று
முன்தினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற தேசிய இலக்கிய விருது விழாவில் அவர்
திறந்த பிரிவு பாடலாக்கத்தில் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்று,
விருது, சான்றிதழ் மற்றும் காசோலையைப் பெற்றுக்கொண்டார்.
இவர்
ஏலவே சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் அம்பாறை மாவட்ட செயலகம்
மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு
தெரிவாகியிருந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours