அம்பாரை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பழைய உகனை வீதி பெரும் பாதிப்புக்குள்ளாகி குன்றும் குழியுமாக இருப்பதனால் அவ்வீதியினூடாக போக்குவரத்துச் செய்யமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாக பிரயாணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இவ்வீதியானது நாவிதன்வெளியில் இருந்து 11 ஆம் கிராமம் கண்ணகி வித்தியாலயம் வரை சுமார் 8 கிலோமீற்றர் வரை பாதிக்கப்பட்டு  குன்றும் குழியுமாக இருப்பதுடன் எவ்வித வாகனங்களும் செல்லமுடியாத நிலையில் இருப்பதாக பிரயாணிகள் தெரிவிக்கின்றனர்.
இவ் வீதியூடாக நாவிதன்வெளியில் இருந்து குறிகிய நேரத்தில் அம்பாரை உகனைக்குச் செல்லும் பிரதான வீதியாகும் இவ்வீதி சேதமாகி இருப்பதனால் இதனூடான போக்குவரத்து பல வருடங்களாக பாதிக்கப்பட்டு இருப்பதுடன் இவ்வீதியினூடக 11 ஆம் கிராமம் 13 கிராமம் 15 ஆம் கிராமம் 16 ஆம்கிராம் ராணமடு மாலையர்கட்டு சின்னவத்தை பூச்சிக்கூடு மாதிரிக்கிராமம் பகுதிகளில் வாழும் அனைவரும் நாவிதன்வெளி மக்கள் வங்கி வேப்பையடி வைத்தியசாலை சவளக்கடை பொலிஸ்நிலையம் நாவிதன்வெளி பிரதேசசெயலகம் பிரதேசசபை  கல்முனை நகருக்கும் செல்வதற்கு பயன்படுத்தும் பிரதான வீதியாக இருப்பதுடன் அப்பகுதிகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் தினமும் தங்களது கடமைக்குச் சென்றுவருவதில் சிக்கல்நிலையும் ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக வீதியில் இருக்கின்ற பெரிய கிடங்குகளில் மோட்டார் சைக்கில்கள் விழுந்து விபத்தாகிய சம்பவங்களும் பதிவாகி இருக்கினறன.
அதேவேளை தேர்தல் காலங்கள் வருகின்ற போது ஒருசில அரசியல் வாதிகள் இவ்வீதியை விளம்பரப்படுத்தி பிரச்சாரம் செய்து வாக்குகளைசூரையாடிச்சென்றார்களே தவிர அங்கு எதுவும் நடைபெறவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
எனவே மக்கள் நலன் சார்ந்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இவ்வீதியின் நிலையினைக் கருத்தில் கொண்டு உடனடியாகச் செப்பநிட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours