எஸ்.சபேசன்
இலங்கை இந்திய பாடசாலை
எறிபந்துப் போட்டிக்கு தலைமைப் பயிற்றுவிப்பாளராக கிழக்கு மாகாணம்
ஏறாவூரைச் சேர்ந்த AGM.றியாஸ் மற்றும் AM உபைதுல்லாஹ் ஆகியோர் நியமனம்
ஆசிய
எறிபந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான
எறிபந்து போட்டிகள் 2024/12/27,28,29 ஆம் திகதிகளில் இந்தியாவின் ஓசூர்
அதியமான் இன்ஜினியர் கல்லூரியில் நடைபெற உள்ளது போட்டிக்காக கல்வி
அமைச்சின் அனுமதியுடன் இலங்கை பாடசாலை எறிபந்து சம்மேளனம் நாடு பூராகவும்
உள்ள பாடசாலைகளில் இருந்து 20 வயதுக்குட்பட்ட 24 மாணவர்களை தேர்வு
செய்துள்ளது. இதில் பெண்கள் அணிக்கான தலைமை பயிற்றுவிப்பாளராக அலிகார்
தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் AGM ரியாஸ் அவர்களும் ஆண்கள்
அணிக்கான தலைமை பயிற்றுவிப்பாளராக மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையில்
உடற்கல்வி ஆசிரியர் Am.உபைதுல்லாஹ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
இந்தியா
செல்ல உள்ள இலங்கை அணிக்கான பயிற்சிகள் எதிர்வரும் 15 ஆம் தேதி
இரத்தினபுரியில் ஆரம்பமாகி 26 ஆம் தேதி இந்தியா நோக்கி புறப்பட உள்ளனர்
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்கள் இருவரும் அலிகார் தேசிய பாடசாலையில் பழைய மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours