துறையூர் வெ.சசிதரன்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட குருமண்வெளி பொதுநூலகத்தால் நடாத்தப்பட்ட 2024ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் ''குருமண்'' சிறப்பு சஞ்சிகை வெளியீடும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அருள் செல்வநாயகம் வாசகர் வட்ட தலைவர் திரு.பா. ஜெகதீஸ்வரன் ( கிராம சேவை உத்தியோகத்தர் ) தலைமையில் பொதுநூலக கட்டடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திரு. சா. அறிவழகன் மற்றும் மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின்  சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி. குகநேசன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்ததோடு ''குறுமண்'' சிறப்பு சஞ்சிகையை நூலினை பொறுப்பாளர்  சீ. ரவீந்திரன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours