லண்டனில் வசிக்கும் கதிரமலை ராஜ்குமார் அவர்களது குடும்பத்தினரால்; வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் நாவிதன்வெளிக்கோட்டத்தினைச்சேர்ந்த வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு அதிபர் க.தியாகராஜா தலைமையில் செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

இவ் உதவியானது பாடசாலையின் அதிபர் க.தியாகராஜா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் ஆசிரியர் வ.குலேந்திரன் மற்றும் த. வாமதேவன்  ஆசிரியர் ஆகியோரின் முயற்சியினாலும் வழங்கிவைக்கப்பட்டது

இந்நிகழ்வில் கதிரமலை ராஜ்குமார் மற்றும் அவரது புதல்வர் ரா.ரக்சனன்  அதிபர் க.தியாகராஜா ஆசிரியர்களான வ.குலேந்திரன் த. வாமதேவன்  ஆசிரியர் பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர் கு.மதிவண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டு இவ் உதவியினை வழங்கிவைத்தனர். அதேவளை இவர்களால் நாவிதன்வெளிக்கோட்டத்தில் உள்ள கணேஷாவித்தியாலய மாணவர்களுக்கும் இவ் உதவி வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours