சா.நடனசபேசன்
இலங்கைத் தாயகத்தில் கல்வி, பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு தற்போதைய அரசியல் சூழலைத் தமிழர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும் என ஈ-கல்வி அமைப்பின் தலைவரும் கல்முனையின் உவெஸ்லி மற்றும் கார்மேல் பாத்திமா கல்லூரிகளின் பழைய மாணவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப்பட்டதாரியுமான டாக்டர் செல்லத்துரை- வாசுதன் தெரிவித்தார்.
30 ஆம் திகதி திங்கட்கிழமை ஜூகா(JUGA) Jaffna University Graduates Association- மற்றும் அதன் துணை அமைப்பு ஈ-கல்வி, கிளையுடன் இணைந்து விக்டோரியாவில் தங்களின் 10 ஆம் ஆண்டு விழாவின் போது தலைமையுரையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் பேசுகையில் ஈ-கல்வி தனது வழக்கமான முயற்சியாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட கல்வியினை மேம்படுத்துவதற்காக பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருவதுடன் ஈ கல்வி நிறுவனத்தின் மூலம் இலங்கையில் 8 கோடி ரூபா செலவுசெய்துள்ளோம் இதன் நோக்கம் இம்மாணவர்களின் கல்விமுன்னேற்றத்திற்கும் கல்விக்கு வறுமை தடையாக அமையக்கூடாது என்பதற்காகவும் கல்வியின் மூலமே எதனையும் சாதித்து நிலைநிறுத்தமுடியும் என்பதற்காகவும் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. குறிப்பாக ஈ கல்வியின் ஊடாக முதல்முதலில் எனது தந்தையார் கவிஞர் ஓய்வுநிலை அதிபர் அமரர் கா.செல்லத்துரை அவர்களது வேண்டுதலுக்கு இணங்க துறைநீலாவணை விஞ்ஞான மாணவர்களது ஒத்துழைப்புடன் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் அறிமுகப்படுத்தியிருந்தோம் அதன்பின்னர்தான் வடக்குக் கிழக்கு மலையகம் என விஸ்தரிக்கப்பட்டது .
இது மட்டுமல்லாமல் பாடசாலை மட்டத்தில் இணையக் கல்வி மனதை ஒருநிலைப்படுத்தல் (Mindfulness) நிகழ்ச்சிகள் அர்டினோவ் (Arduino) திட்டங்கள் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான மாதிரித் தேர்வுகளை நடத்துகிறது. பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல் வழங்கும் புதிய திட்டங்களில் கவனம் செலுத்த உள்ளது. எனவும் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours