வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  வசதிகுறைந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவு பொதிகள் மற்றும் உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது.


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அமிர்தகழி பெரிய உப்போடை திருப்பெருந்துறை திராய்மடு 
 
ஆகிய பிரதேசங்களில் மொத்தமாக 900 குடும்பங்களுக்கு 
சமைத்த உணவை வழங்கியது.


மேலும் நே செட்டிபாளையத்தில் 50 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டு. இ.கி.மிசனின் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் நேரடியாக இப் பிரதேசங்களுக்கு சென்று வழங்கி வைத்தார்.

சில பிரதேசங்களுக்கு இயந்திரப்படகு மூலம் கொண்டு சென்று உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இகிமிசன் இல்ல மாணவர்கள் அபிமானிகள் மற்றும் தொண்டர்கள் இப் பணியில் இணைந்து ஒத்துழைப்பு வழங்கினர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours