எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மேற்கு கரடியனாறு கரடியன்குளம்  ஆத்மகணானந்தா வித்தியாலயத்தில் ஒளிவிழா நிகழ்வானது மடக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையையில் இன்று (18) திகதி இடம் பெற்றது.

மாவட்டத்தில் அதி கஷ்ட பிரதேச பாடசாலைகளில் ஒன்றான ஆத்மகணானந்தா வித்தியாலயலத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒருங்கினைப்பில் ஒளி விழா நிகழ்வு நடைபெற்றது.

 இதன் போது நிட்ஸ் நிறுவன ஒருங்கமைப்பில்  துரை இராயி அறக்கட்டளை நிதி அனுசரனையில் இப்பிரதேச மக்களுக்கான பெறுமதியான உலர் உணவுப் போதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் முன்பள்ளி சிறார்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால்  கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் போதகர் கிருஸ்டோபர், மெதடிஸ்த்த திருச்சபையின் அருட்சகொதரி, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவருபரஞ்சின் முகுந்தன் (காணி), ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே. தனபால சுந்தரம், நிட்ஸ் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் இ. துஷ்யந்தன், ஆத்மகணானந்தா வித்தியாலய அதிபர் என்.சண்முகலிங்கம் , கிராம சேவகர் எஸ். கோபு மற்றும் பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours