மூதூர் கல்விவலயத்திற்குட்பட்ட மல்லிகைத்தீவு மகாவித்தியாலயத்தில் பாடசாலையில் மாணவர்களின் விவசாய பாட பிரயோகம் அறிவையும் அடைவையும் மேம்படுத்துவதற்கான பேண்தகு பசுமை(வலை) இல்லம் திறந்து வைக்கும் நிகழ்வு அதிபர் எஸ்.கணேஸ் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது
பாடசாலையின் வேண்டுகோளை ஏற்று பழைய மாணவி திருமதி ஜெயந்தி நிமலரெட்னம் அவர்களது புதல்வியும் பல்கலைக்கழக மாணவியுமான செல்வி சிந்தி நிமலரெட்ணம் (France)
அவர்களது நிதி உதவி மூலம் நிர்மானிக்கப்பட்டது.
நிகழ்வில் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் சிராஜ் திருகோணமலை மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
மூதூர் விவசாய உதவிப்பணியாளர்இ விவசாய போதனாசிரியர்இ விவசாய தொழிநுட்பவியலாளர்இ விவசாய பாட ஆசிரிய ஆலோசகர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours