மாளிகைக்காடு செய்தியாளர்

கல்முனை கல்வி வலயம் 2023 க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட சாதனையை பாராட்டி அந்த சாதனைக்கு காரணமானவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இவ்வெற்றிக்கு பங்களிப்பு செய்த வலயத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா ஆளணியினர் வலயப் பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த இமாலய வெற்றிக்காக தலைமைத்துவம் வழங்கிய கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கணக்காளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours