முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினதும்  அவரது குடும்பத்தவர்களினதும் முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

மேல் மாகாண மேல்நீதிமன்றம் பத்திரிகை விளம்பரம் மூலம் வங்கிக் கணக்குகள் ஏனைய சொத்துக்கள் உட்பட முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவித்துள்ளது.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 18 வங்கி கணக்குகள், 5 ஆயுள்காப்புறுதிகள் ஆகியவற்றை செயல் இழக்கச் செய்துள்ளதுள்ளதுடன் கொழும்பு ஐந்தில் தொடர்மாடியொன்றையும், மேர்சிடெஸ் பென்ஸ் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளது என நீதிமன்ற விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வங்கி கணக்குகளும் சொத்துக்களும் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தவர்களிற்கு சொந்தமானவை.

மேலும், டிசம்பர் 23ஆம் திகதி முதல் 2025 ஜனவரி 3ஆம் திகதி வரை இந்த சொத்துக்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முடக்கி வைத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours