(அஸ்லம் எஸ்.மெளலானா)
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த பாரிய சிரமதானப் பணி நேற்று சனிக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டது.பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதாம்பாவா தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளர் சம்சுன் அலி மற்றும் முக்கியஸ்தர்களான எம்.எம்.ஜவ்பர், எம்.பாரூக் உள்ளிட்ட கட்சியின் செயற்பாட்டாளர்களும் வைத்தியசாலை நிர்வாகத்தினரும் இணைந்து இந்த சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர்.
இதன்போது வைத்தியசாலையின் சுற்றுச்சூழல் முற்றாக துப்பரவு செய்யப்பட்டு, கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
Post A Comment:
0 comments so far,add yours