(வி.ரி. சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால்  உடைக்கப்பட்ட பாரிய நீர்க்குழாய் திருத்த வேலைகள்  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர்களால் ஜரூராக நடைபெற்று வருகிறது.


தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஹைதர்அலி சாய்ந்தமருது பிரதேச பொறுப்பதிகாரி கஜனி முருகேசு,அக்கரைப்பற்று பிராந்திய பொறியியல் பிரிவுப் பொறியியலாளர் தாமோதரம் வினாயகமூர்த்தி , மற்றும் 
காரைதீவு பிரதேச காரியாலய  பொறுப்பதிகாரி பொறியியலாளர் விஜயரெத்தினம் விஜயசாந்தன் ஆகியோர் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று புதன்கிழமை பகல் அங்கு பிரதான குழாய் பொருத்தும் பணி இடம்பெற்றது.
 
சம்மாந்துறை பிரதேசத்தின் 
நயினாகாட்டை அடுத்துள்ள சுரிப்போடு முந்தல் என்ற வடசேரி பிரதேசத்தில் உள்ள பாரிய குழாய் தகர்க்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours