எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில்  பாரிய வளர்ச்சியை காண வேண்டும் எனும் நோக்கில் பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான தேசபந்து மா.செல்வராசா மூன்றரை மில்லியனுக்கும் அதிகமான தொகையினை வாரி வழங்கி மாவட்டத்தில் உள்ள பல செல்வந்தர்களுக்கு மத்தியில் முன்னுதாரன புரிசராய் செயற்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலையான மெதடிஸ்த மத்திய மிஷன் உயர் தர பாடசாலையில் இன்று 22.12.2024 திகதி இடம் பெற்ற பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்விலேயே தொழிலதிபர் தேசபந்து மா.செல்வராசா மூன்றரை மில்லியனுக்கும் அதிகமான தொகையினை  10 மாணவர்களுக்கான உதவித் தொகையாக வழங்கியுள்ளார்.

பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களுக்காக நான்கு வருடத்திற்கான உதவித் தொகையாக மாதாந்தம் தலா 7000/= ரூபாய் வீதம் நான்கு வருடங்களுக்கு 3,360,000/= ரூபாயினையும், அதற்கு மேலதிக பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ள 14 மாணவர்களுக்கு அவர்கள் பல்கலைக்கழகம் செல்லும்போது தமக்கு தேவையான ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக 5000/= பொறுமதியான வவுச்சர்களையும் வழங்கி வைத்துள்ளார்.

மாவட்டத்தில் பொறியியல் துறை சார்ந்து பல மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கும் செயற்பாட்டிற்கு பாரிய பங்காற்றி வரும் பொறியியலாளர் வை.கோபிநாத் அவர்களை இந்நிகழ்வின் போது தொழிலதிபர் மா.செல்வராசா அவர்கள்அவர்கள் பாராட்டியுள்ளார்

தொழிலதிபர் தேசபந்து மா.செல்வராசா கடந்த காலங்களில் மாவட்டத்தில் ஏற்பட்டஏற்பட்ட பல அனர்த்த நிலவரங்களின் போது தொடர்ச்சியாக தனது சொந்த நிதியில் பல சமூக சேவையினை மேற்கொண்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours