( வி.ரி. சகாதேவராஜா)

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின்  "சாதுரிய காக்கையார்" என்ற சிறுவர் நாடகத்திற்கு தேசிய ரீதியில் பல விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அரச சிறுவர் நாடக விழா - 2024  விருதுகள் வழங்கும் நிகழ்வு 
கொழும்பு அலரி மாளிகையில் நேற்று(1) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அதன் போது குறித்த நாடகத்திற்கு பல விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தெரிவித்தார்.

 இந்த வருடத்திற்கான சிறந்த பிரதியாக்கத்திற்கான  முதலாமிட விருது "சாதுரிய காக்கையார்" நாடகத்திற்காக  பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி சுகன்யா ரவீந்திரகுமாருக்கு வழங்கப்பட்டது.

அதேவேளை சிறந்த தயாரிப்பாளருக்கான  இரண்டாவது இடத்துக்கான விருதாது  பாடசாலையின் ஆசிரியர். சிவகுரு நந்தகுமாருக்கு வழங்கப்பட்டது.

 ஆசிரியர் திருமதி தர்ஷினி வித்தகராஜ்க்கு சிறந்த ஒப்பனைக்கு முதலாம் இடத்துக்கான விருது கிடைக்கப்பெற்றது.
 சிறந்த இசையமைப்புக்கான விருது ஆசிரியர் றொய்ஸ்டன் செலர்க்கும் , "மீள நினை நாடகத்திற்கு" சிறந்த அரங்கு முகமைத்துவத்திற்கான விருது அற்புதத்துரை தர்மிதனுக்கும் கிடைக்கப்பெற்றது.

 மேலும் சிறந்த நடிகைக்கான முதலாமிடம் மாணவி செந்தூரன் ஸ்ருதிக்கும்
இரண்டாமிடமானது மாணவி தயாபரன் சப்தனாவுக்கும் கிடைக்கப்பெற்றது.

 சிறந்த நடிகருக்கான  மூன்றாமிடத்திற்கான விருது மாணவன் அன்புராசா கிஷாளனுக்கும் மற்றும் சிறுவர் நாடக நடிகைக்கான திறமைச்சான்றிதழானது அருநேஷன் கேஷ்னா மற்றும் ரகுராமன் யுபாஷனாவுக்கும் வழங்கப்பட்டது.

 மகள் காகம் பாத்திரத்தில் திறமையினை வெளிப்படுத்திய நந்தகுமார் ஷேத்தரண்யாவுக்கு திறமைச் சான்றிதழும் வழங்கப்பட்டது. 



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours