( வி.ரி. சகாதேவராஜா)
 திருக்கோவில் விநாயகபுரம் மயானத்தில் பிரேதத்தை வைத்து கிரியைகளை செய்வதற்கான மாடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது .

தனியார் தனவந்தர் ஒருவர் இக்கட்டடத்தை நிருமாணித்துக் கொடுத்துள்ளார். அது சுனாமி துவி தசாப்த நினைவேந்தல் நாளன்று திறந்து வைக்கப்பட்டது.

 திருக்கோவில் பிரதேசத்தில் சுமார் 432 ஆத்மாக்கள் இந்த ஆழிப்பேரலையில் அள்ளுண்டு சென்றனர். அவர்களுடைய ஆத்ம சாந்தி பிரார்த்தனைகள்  பெரிய முகத்துவாரம் தம்பிலுவில் மற்றும் திருக்கோவிலில் உயிர்நீர்த்தவர் இல்லம் ஆகியவற்றில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 அந்த வகையில் விநாயகபுரத்தில் ஒரு  வித்தியாசமான முறையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தினுடைய தலைவர் பாலையா சத்தியசிவம் அவரது பெற்றோரான 
 பாலையா இந்திராணி  ஞாபகார்த்தமாக    விநாயகபுரம் மயானத்திலே பிரேத மாடத்தை  நிர்மாணித்துக் கொடுத்துள்ளார்.

நிகழ்வில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலப்பணிப்பாளர் கண.இராசரெத்தினம் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

அமரர்களுக்கு  கிரியைகளை ஆராதனையை செய்கின்ற ஒரு கட்டிடத்தை மாடத்தை திறந்து வைத்த இந் நல்ல வைபவம் நேற்று முன்தினம் காலை  இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours