மாளிகைக்காடு செய்தியாளர்
வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நாட்டில் இவ்வாறானதொரு இடர் ஏற்பட போகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருந்த போதும் அப் பிரதேசத்தில் உள்ள அரச அதிகாரிகள் அப்பிரதேசத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை இந்த இடத்தில் நான் வினயமாக கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அதேபோல் மாவடிப்பள்ளி பாலம், கிட்டங்கி பாலம் ஆகிய பாலங்கள் சரியாக நிர்மாணிக்கப் படாமையின் காரணமாக வெள்ள நிலைமைகள் போது அப்பகுதியில் உயிர் ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாகவும் எட்டு உயிர்களை காவு வாங்கிய பாதையை அரச அதிகாரிகள் இன்னும் கண்டு கொள்ளவில்லை என்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.
நேற்று (03) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இம்முறை ஏற்பட்ட உயிர் சேதம் போன்று இன்னொரு முறை இடம்பெறாமல் எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.
கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அஸ்வெசும திட்டத்தினால் வறுமைக்கோட்டில் வாழ்கின்ற மக்கள் இன்னும் பாதிப்புக்குள்ளான நிலையினையே அவதானிக்க முடிகிறது. இத்திட்டமானது அப்போதைய அரசாங்கத்தினை தக்க வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட மக்களுக்கு பொறுத்தமற்றவொன்றாகும். இது விடயம் குறித்து அப்போதைய அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் அரசியல் அதிகாரம் மூலம் நியமிக்கப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் குறித்த நடவடிக்கைகளை இவ்வரசாங்கம் இது வரை முன்னெடுக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டியவர், இதுவிடயம் குறித்தும் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours