( வி.ரி.சகாதேவராஜா)

பொத்துவில் பிரதேசத்தில் உள்ள கோமாரி மற்றும் செல்வபுரம் பகுதிகளில் நேற்று(3) நள்ளிரவில் யானைகள் பலத்த அட்டகாசத்தை புரிந்துள்ளன.

 கோமாரிப் பகுதியில் சண்முகம் திலகராசா (வயது 48 )என்பவரின் வீட்டை உடைத்து அங்கிருந்த நெல்லை உறிஞ்சி குடித்துள்ளது.

 அது மாத்திரம் அல்ல அங்கு சமையலறையில் இருந்த அங்கர் பால்மா மற்றும் பல உணவு பண்டங்களை சாப்பிட்டிருக்கிறது.
 மொத்தத்தில் அந்த வீடு உடைத்து சேதமாக்கப்பட்டிருக்கின்றது .

அப்போது உள்ளிருந்த மூன்று பெண் பிள்ளைகளும் தாயும் தகப்பனும் பின்னாலுள்ள யன்னல் வழியாக பாய்ந்து மயிரிழையில் தப்பி ஓடி இருக்கின்றார்கள் .
இல்லாவிட்டால் அவர்களையும் அடித்து கொன்றிருக்கும்

அடுத்த சம்பவம் செல்வபுரத்தில் அதே நேரத்தில் இடம்பெற்றது .
அங்கே சுமார் மூன்று வீடுகளை மதில்களை உடைத்து சேதமாக்கி இருக்கின்றது .

பொத்துவில் கோமாரி பிரதேசத்திலே கடந்த இருமாதங்களாக யானையின் தாக்குதல் கூடுதலாக இருக்கின்றது. இருவர் கொல்லப்பட்டனர் .

 ஆனால் இதுவரை தாக்குதலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours