( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை
ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகள், பார்வையிடவரும்
பொதுமக்கள் தொடர்பான பாதுகாப்பு அறிவுறுத்தல் கூட்டம் வைத்தியசாலை
பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று முன்தினம்
வைத்திய சாலையில் நடைபெற்றது.
அங்கு பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் விளக்கமளிக்கையில்..
நோயாளிகள்,
பார்வையாளர்கள், உத்தியோகத்தர்களின் பாதுகாப்பும் வைத்தியசாலையின் பௌதீக
வளங்களின் பாதுகாப்பும் ஒரு சிறப்பான மருத்துவசேவையை உறுதிப்படுத்த
இன்றியமையாதது.
அந்தவகையில்
கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு தொடர்பாகவும் வைத்தியசாலை
பாதுகாப்பு பிரிவினர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும் இங்கு
கூற விழைகிறேன் என்றார்.
அவர்களின் செயற்பாடு சம்பந்தமான புதியதொரு செயன்முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
கலந்துரையாடலின்போது
கடந்தகாலங்களில் ஏற்பட்ட குறைபாடுகள் சம்பந்தமாகவும் அப்படியொரு
நிலைமையில் எவ்வாறு அவற்றைக் கையாளவேண்டுமென்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
வைத்தியசாலை
என்ற எண்ணமும் நோயாளிகளுக்கான சிறப்பான வைத்திய சிகிச்சைக்கு
பாதுகாப்புப்பிரிவும் முக்கியமானது என்றவகையில் நாம் நேர்த்தியாக பயணிக்க
தயாராக இருக்கின்றோம் என அவர்கள் கூறினார்கள்.
‘
Post A Comment:
0 comments so far,add yours