அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளான நற்பிட்டிமுனை பெரிய நீலாவணை மருதமுனை பாண்டிருப்பு சாய்ந்தமருது மற்றும் நகரப்பகுதிகளில் அதிகளவான கட்டாக்காலி மாடுகள் நாய்கள் உலா வருகின்றன.
இதன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனமெடுத்து நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அதிகமான மாடுகள் நாய்கள் வீதியிலேயே படுத்துறங்குவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்னுள்ள வீதியில் நாய்கள் நடமாடுவதோடு பல நாய்கள் பொலிஸ் நிலையம் செல்லும் வாசலில் வீதியில் படுத்துறங்குகின்றன.
மாலை நேரப் பொழுதில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவதனால் இரவுப்பொழுதினை ஒளியூட்டுவதற்காக வீதி விளக்குகள் போதியளவில் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலையும் இங்கு காணப்படுகின்றது.எதிர்பாராத நேரத்தில் வாகனங்களுக்கு குறுக்காக பாயும் போது நாயுடன் வாகனம் மோதிக் கொள்வதை தவிர்ப்பதற்காக திடீரென தடுப்பிடும் பொழுது ஏற்படும் அசௌகரியம் பாரிய போக்குவரத்து மனவுளைச்சலுக்கும் அச்சத்திற்கும் காரணமாகிப் போகும் சூழல் அப்பகுதியில் இருக்கின்றது.
Post A Comment:
0 comments so far,add yours