முதல் கனவு கவிதை நூல் வெளியீடு மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரிய போரதீவு பட்டாபுரம் இளைஞர் ஒன்றியத்தினரால் கிஷாலினியின் "முதல் கனவு" கனாக்கவிதை நூல் வெளியீட்டு விழா  (19.01.2025) பெரிய போரதீவு M.Brothers மண்டபத்தில் திரு.கே.தினேஷ் தலைமையில் இடம்பெற்றது.

 பெரிய போரதீவு செல்வி கிஷாலினி ரவீந்திரன் அவர்களின் முதல் கனவு கவிதை நூல் கனாக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள்பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் பொதுச் சுகாதார பரிசோதகர் திரு.குபேரன் அவர்களும், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய அறங்காவலர் சபையினர், கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். குறித்த நிகழ்வில் இரா.சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில் " ஒரு இனம் தேசிய இனமாக கருதப்படுவதற்கு மொழி, கலாசாரம், பண்பாடு போன்றவை முக்கியமான விடயங்கள். அவற்றை எமது இளம் சமுதாயம் தொடர்ச்சியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதுடன் அடுத்தடுத்த சந்ததியினருக்கும் இவற்றை சரியான கடத்த வேண்டும். அப்போது தான் நாம் அனைவரும் இணைந்து எமது இலக்கினை அடையலாம். அதற்கு அனைத்து கிராம மட்ட அமைப்புக்களும் கிஷாலினி போன்ற யுவதிகளினுள் மறைந்துள்ள கலையார்வங்களை வெளிக்கொணர வேண்டும். அந்த வகையில் இளைஞர் ஒன்றியம் இது போன்ற நிகழ்வுகளை செய்வதை வெகுவாகப் பாராட்டுகின்றேன். அத்துடன் இக் கவிதை நூலினை என செலவில் போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்."






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours