எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
2024
நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளநிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட
விவசாயத்தின் பாதிப்புகள் பரீட்சிக்கப்பட்டு நிறைவடைந்துள்ள,
மாவட்டங்களுக்கான இழப்பீட்டுத் தொகைகளை விடுவிப்பதற்கு அவசியமான
நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்து, கமத்தொழில் மற்றும் கமநலக்
காப்புறுதிச் சபை ஊடக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி
மட்டக்களப்பு உட்பட ஏனைய மாவட்டங்களுக்கான இழப்பீட்டுத் தொகைகள் தொடர்பான
நடவடிக்கைகளை 2025 பெப்ரவரி மாத முதல் பகுதியில் ஆரம்பிப்பதற்கு அவசியமான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,
பொலன்னறுவை, அம்பாறை,
திருகோணமலை முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட
இழப்பீட்டுத் தொகையை இம்மாத இறுதிக்குள் செலுத்துவதற்கு அவசியமான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வறிவித்தலில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours