பாறுக் ஷிஹான்
கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)”தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக 2025 ஆம் வருடத்தில் அரச கடமைகளை ஆரம்பித்தல் அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(01)காலை 8.30 மணிக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
மேலும் இந் நிகழ்வில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களுக்கும், ஏனையவர்களுக்குமாக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்மாதிரியாக செயற்படல், ஊக்கமளித்தல், ஈடுபடுத்தல் மற்றும் மாற்றமுறும் தேவைகளைப் பலமுள்ளதாக உறுதிப்படுத்துவதினூடாக சமூகமொன்றின் நடத்தைமுறையிலான மாற்றங்களை ஏற்படுத்தும் பலமான அணுகுமுறையொன்றை அடையக்கூடியதாக இருக்கும்.
இதன் மூலம் ஒரு நாட்டின் சமூக, பொருளாதார கலாசார நெறிமுறையிலான மற்றும் சுற்றாடல் ரீதியாக முன்னோக்கிச் செல்லும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் வேண்டும். இதற்காக நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களும் அரச ஊழியர்களும் நாட்டு மக்களும் ஒன்றாக ஒன்றிணைந்து ஒரே நோக்கத்துடன் ஒரே திசையை நோக்கிச் செயற்படுதல் வேண்டும்.என்ற நோக்கத்தினை மையப்படுத்தி இன்றைய கடமை ஆரம்ப நாள் அமையப் பெறும்.
இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்(LLB), பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம், கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுஸைன், மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே றினோஸா,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எப் சாஹீனா பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள்,உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours