( காரையூர் வேதசகா)
காரைதீவு விளையாட்டு கழகத்தின் ஒன்று கூடலும் கழக இரவும் இடம் பெற்ற வேளையில் மூவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு இடம்பெற்றது.
கிழக்கின்
பழம் பெரும் கழகமான காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூக
நிலையத்தின் வருடாந்தபொதுக் கூட்டம் மற்றும் கழக இரவு 2024 க்கான தலைவர்
எந்திரி வி. விஜயசாந்தன் தலைமையில் கடந்த சனிக்கிழமை கழக தலைமையகத்தில்
நடைபெற்றபோதே இக் கௌரவிப்பு இடம்பெற்றது.
கழகத்தின்
போஷகர் சிவ.ஜெகராஜன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு
பெற்றமைக்கும், கழக போசகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா, கிழக்கு மாகாண அதி
உயர் விருதான "வித்தகர்" விருதினை பெற்றமைக்கும், முன்னாள் தலைவர்
எஸ்.ரகுநாதன், இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு
பெற்றமைக்கும் பொன்னாடை போர்த்தி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours