( ஆ.நிதாகரன்) 

 நாடளாவிய ரீதியில் பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பாக கடந்த அரசாங்க காலத்திலிருந்து தற்பொழுது வரை அரசிற்கு தெரியப்படுத்தியும் உறுதியான தீர்வு எட்டப்படாத நிலையில் நேற்றைய(30) தினம்

கண்டியில்  வணக்கத்திற்குரிய மல்வத்துபீட மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் அவர்களை சந்தித்த அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத் தலைவர் க.அனிதன் மற்றும் சங்க உறுப்பினர்களால் மகஜர் ஒன்றை கையளித்து ஆசிபெற்றதுடன் அவர் எமது "பாடசாலையில் இணைக்கப்பட்டு கற்பித்தல் சேவையில் ஈடுபடும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் பிரச்சினைகள்"  தொடர்பான கேட்டறிந்துகொண்டார். எமது பிரச்சினைகள் தொடர்பில் தான் விசேட கவனம்செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours