(செயிட் ஆஷிப்)
இதன்போது எலிக்காய்ச்சல் பரவும் வழிமுறைகள் மற்றும் அதற்கான சூழல்கள் பற்றியும் எலிக்காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஒழுங்கு முறைகள் தொடர்பாகவும் விபரிக்கப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டன.
அத்துடன் சுகாதாரத் தொழிலாளர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்களுக்குஎலிக்காய்ச்சலுக்கான தடுப்பு மாத்திரையும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம். முனவ்வர், அக்கரைப்பற்று மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி சமீனா ஹம்தூன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம். பெளமி, வேலைகள் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் எம்.சலீத் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேறறிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours