நிதாகரன்
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர்- ஆனைகட்டியவெளி வீதியானது கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரதுசெய்ய முடியாமல் முற்றாக பாதிக்கப்ட்டுள்ளது.
மண்டூர் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்குட்பட்ட இவ்வீதியால் கடந்த காலங்களில் பொதுமக்கள், விவசாயிகள்,வாகனச்சாரதிகள்,பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் தங்கள் போக்குவரத்தினை மேற்கொண்டு வந்தனர்.தற்பொழுது மிகவும் சிரமத்திற்கு மத்தியில் மாற்று வீதியூடாக நீண்ட தூரம் பயணித்தே தங்கள் நாளாந்த போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வீதியின் ஊடாக நெடியவட்டை காக்காச்சிவட்டை யானைகட்டியவெளி,சின்னவத்தை உள்ளிட்ட கிராமங்களுக்குச்செல்லும் அனைவரும் இவ்வீதியினூடகப்பயணம் செய்துவந்தநிலையில் தற்போது இதனூடான போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சம்மந்தப்பட்டவர்கள் செப்பனிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Post A Comment:
0 comments so far,add yours