இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய ஐஸ்டினா முரளிதரன் தலைமையில் இந் நிகழ்வு இன்று (01) திகதி காலை இடம் பெற்றது.
இதன் முதல் நிகழ்வாக தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வின் பிரதான நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன் முதல் நிகழ்வாக கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தினை தேசிய ரீதியாக ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைப்பதை நிகழ்நிலை ஊடாக உத்தியோகத்தர்களுக்கு காண்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களினால் கிளீன் ஸ்ரீலங்கா சத்தியப்பிரமான நிகழ்வு இடம் பெற்றது.
அத்தோடு கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு மாவட்ட செயலக வளாகத்தில் மர நடுகை நிகழ்வொன்றும் இடம் பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours