சா.நடனசபேசன்

LDSP திட்டத்தின் கீழ் உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றித்தின் நிதி உதவியின் மூலம்  நாவிதன்வெளி பிரதேசசபைக்குட்பட்ட சவளக்கடை பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள சுபமங்களா கலாசாரமண்டபம் திறந்துவைக்கும் நிகழ்வு பிரதேசசபையின் செயலாளர் பி.சதீஸ்கரன் தலைமையில் 16 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக LDSP உதவித் திட்டப் பணிப்பாளர் அம்பாரைமாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி, விஷேட அதிதியாக LDSP திட்டத்தின் அம்பாரை மாவட்ட பொறியியலாளர்  பி.அச்சுதன்,   நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் முஜீபீர், அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக ஆய்வு உத்தியோகத்தர் திருமதி சுமதி வசந்தராஜ், சவளக்கடை பிரதேச சணசமுக நிலையத்தின் தலைவர் ஜெயசங்கர், செயலாளர் நாகரெட்ணம்  மற்றும் மதத் தலைவர்கள் இ பிரதேசசபை உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர் .









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours