( வி.ரி. சகாதேவராஜா)
இன்று நடப்படும் சந்தன மரம் போன்று  “தானும் மணம் வீசி பிரதேசத்திற்கும் வாசத்தை கொடுப்பது"  போன்று  நாமும் வாழ்ந்து மற்றவர்கள் மனதிலும் மணம் வீசும் செயற்பாடுகளை சந்தன மரம் போன்று ஆரம்பியுங்கள் .

இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை ஆதார வைத்திய சாலையில் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகள் ஆரம்பித்து வைத்த நிகழ்வில் உரையாற்றிய பொழுது தெரிவித்தார்.

இந் நிகழ்வானது வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் தலைமையின் கீழ் அரச நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக  (01)  காலை 8:30 மணி அளவில் நடைபெற்றது.

தேசிய கொடியை ஏற்றி வைத்தியசாலை பணிப்பாளர்  வழமையான செயற்பாடுகளான மரம் நடுதல், புறா விடுதல், என்பனவற்றுடன் பால் சோறு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

அங்கு தலைமையுரை ஆற்றிய பணிப்பாளர் மேலும் தனது சிறப்புரையில்..

 “மனம் போலவே வாழ்க்கை” என்ற உதாரணத்துடன் எமது செயற்பாடுகள் தூய்மையானதாகவும் தொலைநோக்குக் கொண்டதாகவும் மற்றவர்களை மதித்து அவர்கள் இன்புறம் விதத்திலும் அமைந்தால், வாழ்வில் நற்பயனை அடைய முடியும் எனவும்,
சுகாதாரத் துறையை பொறுத்தமட்டில் நோயாளர்களுக்கு உதவுதல், அவர்களுக்கான சிறந்த சேவையை வழங்குதல் என்பன ஓர் ஆலய தொண்டிற்கும், பொதுத் தொண்டிற்கும், சமூக தொண்டிற்கும் ஈடானது.


“கடமையே கண்கண்ட தெய்வம்” ஆகவே நாம் வெளியில் சென்று சமூக சேவையாற்றுவதை விட அதைவிட மேலான சேவை செய்யும் வாய்ப்பு இங்கே உள்ளது. இதுவும் ஒரு வரம் எனவும்,
எனக்கூறி அனைத்து சேவையாளர்களுக்கும்  வாழ்த்துக்களை தெரிவித்தார்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours