( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெய்த அடை மழையினால் பெரும்பாலான தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் நிரம்பி வருகிறது.
110 அடி ஏக்கர் கொள்ளளவுள்ள. அம்பாறை சேனநாயக்கா சமுத்திரத்தில் 101 அடி ஏக்கர் வெள்ளம் நிரம்பி இருப்பதாக அறிவித்துள்ளது .
மேலும் மழை பொழிகின்ற பட்சத்தில் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட நேரிடலாம் என்று கூறப்படுகிறது .
இதனிடையே
கல்முனை பிரதேசத்தில் குறிப்பாக தபாலகம் பிரதேச செயலகம் போன்ற பகுதிகளில்
கூடுதலான வெள்ளம் பாயந்து வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து மந்தமாக
இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக தாழ்நிலப் பகுதிகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
நேற்று பூராக வானம் இருண்டு மழைபொழிந்து கொண்டிருந்தது.
Post A Comment:
0 comments so far,add yours