கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சையில் தவறும் மாணவர்களின் தொழில் திறமையை விரித்தியடையச் செய்யும் நோக்கோடு பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் சமூக கற்கை நிலையம் திறந்துவைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை அதிபர் சோ.செல்வம் தலைமையில் இடம்பெற்றது.
இக் கற்கை நிலையத்தினை பட்டிருப்பு வலையக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் ஸ்ரீதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார். இந்நிலையத்தில் நீர் குழாய் பொருத்துதல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தையல் பயிற்சி ,ஐசிங் கேக் தயாரிப்பு, மணப்பெண் அலங்காரம் புடவை மடிப்பு (சாறி அயனிங்)), சிகை அலங்காரம், மருதாணி உடல் அலங்காரம், எலக்ரிக்கல் (வயரிங்) போன்ற கற்கை நெறிகளை கற்கின்ற வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையத்தினை இப்பாடசாலையில் உருவாக்குவதற்கு வழிகாட்டியாக இருந்த வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் இந்நிகழ்வை திறம்பட நடத்துவதற்கு அனுசரணையாக செயல்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் சுபாஷினி,யோகராஜா சனாார்த்தனன், செல்வநாயகம் ரவீந்திரன் , ஆ. கவிதா ஆகியோருக்கும் ஏனையபழைய மாணவர்கள் கிராம மக்கள்நலன் விரும்பிகள் பொது அமைப்புக்களின் தலைவர்கள் அனைவருக்கும் பாடசாலையின் அதிபர் சோ . செல்வம்.நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். மற்றும் இப் பாடசாலையின் வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாகிய இந்நிகழ்வு பற்றி பல்வேறு அதிகாரிகளும் ஆசிரியர்களும் அரசியல்வாதிகளும் ஏனைய பாடசாலை அதிபர்களும் இப்பாடசாலை சமூகத்திற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours