( வி.ரி.சகாதேவராஜா)

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற 40 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான மார்பகப்புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தரங்கு  திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்றது .

கல்முனை றோட்டரிக் கழக தலைவர் Rtn என். ரதீசன் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் 
 ஒவ்வொன்றும் 2000/- பெறுமதியான சத்துணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வைத்தியர் பி. மோகனகாந்தன், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சிரேஷ்ட தாதியர்  திருமதி எஸ். சிவமலர்  வளவாளர்களாக பங்கேற்றனர்.  

கழகத்தின் செயலாளர் Rtn எம். சிவபாதசுந்தரமும்  நிகழ்வில் கலந்துகொண்டார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours